English Premier League 2018-19:முதல் ஆட்டத்தில் அர்செனல் – மான்செஸ்டர் சிட்டி மோதல்!

Default Image

ஆகஸ்ட் மாதம் முதல் மே மாதம் வரை இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும்  நடைபெறும் தொடர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடர் ஆகும். இதில் 20 அணிகள் பங்கேற்கும். ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். ஒரு ஆட்டம் சொந்த மைதானத்திலும், மற்றொரு ஆட்டம் எதிரணியின் சொந்த மைதானத்திலும் நடக்கும்.

Image result for english premier league 2018-19 schedule

லீக் போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும். 2017-18 சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை பின்னுக்குத் தள்ளி மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் இன்று 2018-19 சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் அர்செனல் அணி நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணியை தனது முதல் ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 11-ந்தேதி தொடங்கி, அடுத்த வருடம் மே 12-ந்தேதியுடன் முடிவடைகிறது.

மான்செஸ்டர் யுனைடெட் தனது முதல் ஆட்டத்தில் லெய்செஸ்டர் அணியை எதிர்கொள்கிறது. லிவர்பூல் தனது முதல் ஆட்டத்தில் வெஸ்ட் ஹாம் அணியை எதிர்கொள்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்