Marimuthu : மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது!
திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது திடீர் மறைவு ஒட்டுமொத்த திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் இருந்து நடிகர் மாரிமுத்துவின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இறுதி ஊர்வலம் தொடங்கப்பட்டது. தேனி மாவட்டம் பசுமலைதேரியில் புறப்பட்டது மாரிமுத்து இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில், இறுதி ஊர்வலத்தில் ஊர் மக்கள் திரைபரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து, தேனி, பசுமலைத்தேரி மயானத்தில் மாரிமுத்து உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, இந்த நிலையில், மாரிமுத்துவின் உடல் தேனி, பசுமலைத்தேரி மயானத்தில் தற்போது தகனம் செய்யப்பட்டது.
சின்னத்திரை தொடரான ‘எதிர்நீச்சல்’ தொடரில் குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான மாரிமுத்து தமிழில் பரியேறும் பெருமாள், கார்பன், எமன், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். நடிகராக மட்டுமின்றி கண்ணும் கண்ணும்,புலிவால் உள்ளிட்ட சில படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார். மாரிமுத்து மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவருடைய படங்கள் அவருடைய சீரியல் எப்போதும் மறக்கவே முடியாது என ரசிகர்கள் உருக்கமாக கூறி வருகிறார்கள்.