G20Summit: டெல்லியில் தொடங்கியது மாபெரும் ஜி20 உச்சி மாநாடு..!

G20 Summit

இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாடு இன்றும், நாளையும் நடக்க உள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 18வது உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாடு மதியம் 1மணிக்கு மேல் இடைவெளி விடப்படுகிறது. அதன் பின், அமர்வு தொடங்கும், இந்திய அரசு சார்பில், இன்று G20 தலைவர்களுக்கு விருந்து வழங்கப்பட உள்ளது.

இந்த மாநாடு முடிந்த பின்பு இரவு 7 மணிக்கு ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார். இந்த மாநாடு காலை 10 மணிக்கு மேல் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்பொழுது மாநாடு தொடங்கியுள்ளது.  இந்நாளில் ஒரேபூமி என்ற தலைப்பிலும், ஒரே குடும்பம் என்ற தலைப்பில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் கூடி உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, கல்வி நிறுவனங்கள், தனியார், அரசு அலுவலகங்கள் ஆகியவை 10ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்