MediaMeet2023: அனைவரும் திராவிட மொழி குடும்பத்தினர்.. மலையாளி கிளப் நிகழ்ச்சியில் முதல்வர் உரை!

MK STALIN

சென்னையில் கேரளா மீடியா அகாடமி, சென்னை மலையாளி சங்கத்தின் ஊடக சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சென்னை மலையாளி சங்கம் இணைந்து நடத்தும் #MediaMeet2023 நிகழ்ச்சியை தொடங்கி வைத்துச் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவரது உரையில், ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டில் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும்.

இந்த விழாவில் பங்கேற்றத்தில் நான் பெருமை அடைகிறேன். கலைஞருக்கு நெருக்கமான நண்பராக இருந்த பத்திரிகையாளர் அருண்ராம். பத்திரிகையாளர் பிஆர்பி பாஸ்கர் எழுதிய “the changing mediascape” என்ற புத்தகத்தை முதலமைச்சர் வெளியிட்டார். இந்த புத்தகத்தை வெளியிடுவதில் பெருமை அடைகிறேன். இன்று ஏராளமான பெண்கள் பத்திரிகை  சிறப்பாக செயல்படுகின்றனர்.

நாம் அனைவரும் திராவிட மொழி எனும் ஒரே மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஊடகத்தினரை உருவாக்குவதில் மலையாளி அகாடமி முக்கிய பங்காற்றுகிறது. சமத்துவத்திற்கு எதிராக உள்ளோருக்கு திராவிடம் எனும் சொல் எரிச்சலை ஏற்படுத்துகிறது. எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்.

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஆபத்து வந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்திற்கு ஆபத்து வந்துள்ளது. மதச்சார்பின்மைக்கு இன்று ஆபத்து வந்துள்ளது. சமூக நீதியை சிதைக்க பார்க்கிறார்கள். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். இந்தியாவை காப்பாற்ற நாங்கள் பாடுபடுகிறோம். தமிழ்நாடும், கேரளாவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்