Mirnaa : மிர்னா ரொம்ப அழகா இருக்கீங்க! ஜெயிலர் ரஜினி மருமகளின் ரீசன்ட் க்ளிக்ஸ்!

Mirnaa new pics

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மிர்னா இளைஞர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்றே கூறலாம். இவர் ஜெயிலர் படத்தில் நடிப்பதற்கு முன்பே தமிழில் பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மட்டும் இல்லை தெலுங்கில் 2 படங்களிலும் மலையாளத்தில் 1 படத்திலும் நடித்திருக்கிறார்.

Mirnaa
Mirnaa [Image -@Mirnaa]

ஆனால், இவ்வளவு படங்களில் நடித்திருந்தாலும் கூட பெரிய அளவில் மிர்னாவின் பெயர் வெளியே தெரியவில்லை. ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்த பிறகு அவருடைய பெயர் பலருக்கும் தெரிய வந்தது. குறிப்பாக இவருக்கு இளைஞர்களுக்கு மத்தியில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது.

Mirnaa
Mirnaa [Image -@Mirnaa]

இந்நிலையில், எங்கு திரும்பி பார்த்தாலும் அவர் தான் இப்போது இளைஞர்களுக்கு ட்ரெண்ட் ஆக இருக்கிறார். எனவே, ரசிகர்களுக்காகவே அவ்வபோது தனது சமூக வலைதள பக்கங்களில் வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு சூப்பராக போஸ் கொடுத்துக்கொண்டு அதற்கான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.

Mirnaa
Mirnaa [Image -@Mirnaa]

அந்த வகையில், தற்போது சிவப்பு நிற சேலையில் இளைஞர்களை மயக்கும் அளவிற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த பலரும் ‘ஜெயிலர் ரஜினி மருமகளா இது’ எனவும் ‘மிர்னா ரொம்ப அழகா இருக்கீங்க’ எனவும் கூறி வருகிறார்கள்.

Mirnaa
Mirnaa [Image -@Mirnaa]

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை மிர்னாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். தற்போது Birthmark  எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்