Medicine Tips : இரவு நேரத்தில் உங்களுக்கு இந்த பிரச்சனை உள்ளதா..? அப்ப உங்களுக்காக தான் இந்த டிப்ஸ்..!

foot

இரவு நேரங்களில் சிலருக்கு பாத எரிச்சல் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இரவு நேரங்களில் சரியான உறக்கம் இருக்காது. அதே சமயம் எழுந்து நடமாடுவதில் பல சிரமங்களை சந்திக்கின்றனர்.

இந்த பிரச்னை பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு பாத எரிச்சல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் நரம்புகள் சேதமடைந்து, பாதங்களில் உணர்வு குறைகிறது. இதனால் இவர்களுக்கு பாத எரிச்சசல் ஏற்படுகிறது. சில நோய்கள் நரம்பியல் சிதைவை ஏற்படுத்தும், இது பாத எரிச்சலுக்கு வழிவகுக்கும்.

அதேபோல், டியூபர்கூலோசிஸ், டிப்தீரியா, மற்றும் சிஃபிலிஸ் போன்ற நோய்த்தொற்று பிரச்னை உள்ளவர்களுக்கு பாத எரிச்சல் பிரச்னை ஏற்படும். சில மருந்துகள், குறிப்பாக சில வகையான கீமோதெரபியூடிக் மருந்துகள், பாத எரிச்சலை ஏற்படுத்தும்.  அதிகப்படியான  நடை மற்றும் நின்று கொண்டே வேலை பார்ப்பாவர்களுக்கு பாத எரிச்சல் பிரச்னை ஏற்படும்.

இந்த பிரச்னை உள்ளவர்கள், வீட்டு வைத்திய முறைப்படி, மஞ்சளை நீரில் கலந்து எரிச்சல் உள்ள இடத்தில் பூசி, அது உணர்ந்தபின் வெதுவெதுப்பான நீரால் துடைக்கலாம். அதேபோல் தேங்காய் எண்ணெயில் இஞ்சி சாறு கலந்து பாதங்களில் தடவி மசாஜ் செய்தாலும் எரிச்சல் அடங்கி விடும்.

இவை வீட்டு வைத்தியம் முறையில் நாம் மேற்கொள்ள கூடிய மருத்துவமுறை. ஆனால், பாத எரிச்சல் கடுமையாக இருந்தால் அல்லது சிகிச்சைக்குப் பிறகும் குணமாகவில்லை என்றால், மருத்துவரை அணுகுவது சிறந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்