RIPMarimuthu : பெரும் சோகம்…இயக்குநர், நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்!

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 57. இவர் பிரபல சின்னத்திரை தொடரான ‘எதிர்நீச்சல்’ தொடரில் குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அந்த சீரியலில் வரும் எம்மா ஏய் அந்த வசனத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதுமட்டுமின்றி தமிழில் பரியேறும் பெருமாள், கார்பன், எமன், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். நடிகராக மட்டுமின்றி கண்ணும் கண்ணும்,புலிவால் உள்ளிட்ட சில படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார். இந்த நிலையில், இவர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!
May 9, 2025