புறா தலை கொண்ட விசித்திர மீன் – சீனாவில் கண்டுபிடிப்பு..!

புறா தலை கொண்ட விசித்திர மீன் - சீனாவில் கண்டுபிடிப்புசீனாவின் கியுஸூ மாகாணத்தில் உள்ள குயாங் நகரில் கடந்த 5-ம் தேதி வித்தியாசமான மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய மீனைக் கண்ட அவர் உடனடியாக அது குறித்து அங்கிருப்பவர்களிடம் கூறியுள்ளார். இதனால் அங்கிருந்த மக்கள் இந்த விசித்திர மீனை பார்ப்பதற்கு அலைமோதியுள்ளனர்.

தண்ணீரிலே வைக்காமலே வெளியில் வைத்து பார்க்கப்பட்டதால், இந்த மீன் சிறிது நேரத்திலே உயிரிழந்துள்ளது. இருப்பினும் இந்த வகை விசித்திர மீனைக் கண்ட அப்பகுதி மக்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

கிராஸ் கார்ப் என்றழைக்கப்படும் இந்த வகை மீன்கள் சுத்தமான தண்ணீரில் மட்டுமே வாழும் தன்மை கொண்டது எனவும், ஆசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் இது காணப்படும் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்