I.N.D.I.A vs NDA : 6 மாநிலங்கள்.. 7 தொகுதி இடைத்தேர்தல்கள்… வெற்றி யாருக்கு.?

PM Modi - Congress MP Rahul gandhi

வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தற்போது இருந்தே தயாராகி வருகின்றன. தற்போது அதற்கான ஒரு சிறிய முன்னோட்டம் இன்று கிடைக்க பெற உள்ளது என்றே கூறலாம். அதாவது கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற ஆறு மாநில இடைத்தேர்தலுக்கான  முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.

ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், அதே போல காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி ஆதரவிலும் இடைத்தேர்தல்களில் ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர். ஆதலால் மேற்கண்ட கூட்டணிகள் உறுதியான பின்பு இந்த இடைத்தேர்தல்கள் நடைபெற்று உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகரித்து உள்ளது.

திரிபுராவில் இரண்டு தொகுதிகள், மேற்கு வங்கம், கேரளா, உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி என ஆறு மாநிலங்களில் ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று முடிவுகள் வெளியாக உள்ளன.

கேரளா : 

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அண்மையில் மறைந்ததை அடுத்து அவர் பொறுப்பில் இருந்த புதுப்பள்ளி தொகுதி காலியானது. இதனை தொடர்ந்து அங்கு காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டி மகன் , சாண்டி உம்மன் போட்டியிடுகிறார். இடதுசாரி கூட்டணி சார்பில் ஜெய்க் தாமஸ் களமிறங்குகிறார். அதே போல, பாஜவும், ஆம் ஆத்மியும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

உத்திர பிரதேசம் : 

உத்திர பிரதேசம் கோஷி சட்டமன்ற தொகுதியில் சமாஜ்வாடி எம்எல்ஏ தாராசிங் சௌஹான் ராஜினாமா செய்து விட்டதை எடுத்து, அந்த தொகுதியில் இடைதேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்தியா கூட்டணி ஆதரவுடன் சமாஜ்வாடி கட்சி சார்பாக சுதாகர் சிங் போட்டியிடுகிறார். அதே போல பாஜக சார்பில் ராஜினாமா செய்து இருந்த முன்னாள் சமாஜ்வாடி எம்எல்ஏ தாராசிங் சௌஹான் களம்கண்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் : 

ஜார்கண்ட்  மாநிலம் டும்ரி தொகுதியில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏ  ஜகர்நாத் மஹ்தோ மறைவுக்கு பின்னர், அங்கு கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி ஆதரவுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில்  பெபி தேவியும், NDA ஆதரவுடன் அனைத்து மாணவர் சங்கத்தின் சார்பில் யசோதா தேவியும் களம் கண்டுள்ளனர்.

மேற்கு வங்க இடைத்தேர்தல் :

மேற்குவங்க மாநிலம் துப்குரி தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ பிஷூ படா ராய் மறைவுக்கு பின்னர் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு காங்கிரஸ் – இடதுசாரி கூட்டணி சார்பில் சிபிஎம் கட்சியை சேர்ந்த ஈஸ்வர் சந்திர ராய் களம் கண்டுள்ளார். ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் நிர்மல் சந்திரா ராயும், பாஜக சார்பில் தபாசி ராய் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

உத்தரகண்ட் : 

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வர் தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ சந்தன் ராம் தாஸ் மறைவால் அங்கும் இடைத்தேர்தல் வந்துள்ளது. இங்கு பாஜக சார்பில் தாஸின் மனைவி பார்வதி களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் பசந்த் குமார், சமாஜ்வாதி கட்சி சார்பில் பகவதி பிரசாத் உள்ளிட்டோர் களம் கண்டுள்ளனர்.

திரிபுரா :

திரிபுரா மாநிலம் பாக்ஸா நகர் தொகுதியில் சிபிஐ(எம்) எம்எல்ஏ சம்சுல் ஹக் மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் சிபிஎம் மிஸான் உசேனும், பாஜக சார்பில் தஃபஜ்ஜால் ஹூசைன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். தன்பூர் தொகுதியில் எம்எல்ஏ பதவியில் இருந்து மத்திய அமைச்சர் பிரதிமா பௌமிக் ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்கு பாஜக சார்பில் பிந்து தேப்நாத், சிபிஎம் சார்பில் கவுசிக் தேப்நாத் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர்.

மேற்கண்ட இடைத்தேர்தல்களில் உத்திர பிரதேசம், ஜார்கண்ட், உத்தரகண்ட், திரிபுரா ஆகிய தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனால் இந்த இடைத்தேர்தல் முடிவு என்பது இரு கூட்டணிக்கும் அடுத்தகட்ட நகர்வு பற்றிய ஓர் புரிதலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
durai murugan periyar
donald trump joe biden
pawan kalyan roja
erode by election 2025
periyar seeman
R Ashwin speech about Hindi