Kodanad case: கோடநாடு வழக்கு! மேல்விசாரணை அறிக்கை.. செப்.21 வரை அவகாசம்!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட மேல் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, மேல் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய செப்.21ம் தேதி வரை அவகாசம் வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
எதிர்தரப்பு சாட்சியாக உள்ள 9 பேரை விசாரிக்க அனுமதி வழங்காத உதகை நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கோடநாடு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட தீபு உட்பட 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். கோடநாடு வழக்கில் மேல்விசாரணை நடந்து வருவதால் அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் கோரி காவல்துறை கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.