G20 Summit: தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய வழிகாட்ட வேண்டும்.! குருகிராம் மாவட்ட நிர்வாகம்
இந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தி வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பலப்படுத்தப்பட்டு, விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதேசமயம், டெல்லியில் ஜி-20 உச்சிமாநாட்டை ஒட்டி, நாளை (செப்-8ம் தேதி) தேசிய நெடுஞ்சாலை 48 இல் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும். இதனால் குருகிராம் நகரின் சாலைகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். அதன்படி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், எச்சரிக்கையுடன் பயணத்தை குறைக்க வேண்டும்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நாளை அதாவது 8 செப்டம்பர் 2023 அன்று வீட்டிலிருந்து வேலை செய்ய வழிகாட்டுமாறு குருகிராம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.