Dosa : ஆந்திரா ஸ்டைலில் அட்டகாசமான தோசை செய்வது எப்படி..?
நாம் நமது வீடுகளில் அடிக்கடி தோசை, இட்லி போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. இந்த உணவுகளை தினமும் ஒரே சுவையில் சாப்பிடுவதை விட, வித்தியாசமான முறையில் செய்தால், வீட்டில் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது இந்த பதிவில் ஆந்திரா ஸ்டைலில் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- வெங்காயம் – 2
- காஷ்மீரி காய்ந்த மிளகாய் – 4
- உப்பு – தேவையான அளவு
- பூண்டு – 5
- பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், காஷ்மீரி காய்ந்த மிளகாய், பூண்டு, பெருங்காயத்தூள், தேவையான அளவுக்கு உப்பு போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் அதனை தனியாக ஒரு பவுலில் எடுத்து சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
இதனை அடுத்து, தோசை கல்லை அடுப்பில் வைத்து சற்று எண்ணை தடவி, அதில் தடிமனாகவும் இல்லாமல் மிகவும் மெல்லியதாகவும் இல்லாமல் தோசை ஊற்றி அதன் மேல் அரைத்து வைத்துள்ள இந்த கலவையை ஒரு கரண்டி எடுத்து தோசை முழுவதும் பரவலாக பூசி விட வேண்டும். தோசை பொன்னிறமாக வந்தபின் தோசையை பிரட்டி போடாமல் அப்படியே மடித்து எடுத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
நாம் தினமும் தோசையை ஒரே சுவையில் செய்து சாப்பிடுவதை விட, இவ்வாறு வித்தியாசமான முறையில் செய்து பார்க்கலாம். இது வித்தியாசமான சுவையில் இருப்பது மட்டுமல்லாமல், அனைவரும் விரும்ப கூடிய சுவையிலும் காணப்படும்.