Mammootty: 72 வயதில் உடம்பை கட்டுகோப்பாக வைத்திருக்கும் மம்மூட்டி! மிரட்டம் ‘பிரமயுகம்’ தோற்றம்!

Bramayugam First Look

மலையாள சினிமாவில் பிரபல நடிகரான மம்முட்டி இன்று (செப்டம்பர் 7) தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் அன்பையும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

இந்த நாளை மேலும் சிறப்பிக்கும் வகையில், அவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘பிரமயுகம்’ திரைப்படத்தின் படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். முதலில் போஸ்டரை பார்க்கையில், இது மம்முட்டி தானா? என அடையாளம் கண்டுபிடிக்க முடிவில்லை. பின்னர், போஸ்டரை உற்று பார்க்கும் போது தான் தெரிகிறது அது மம்முட்டி என்று.

Bramayugam
Bramayugam [Image-@mammukka]

அந்த வகையில், அவரது கெட்டப்பும், உடலமைப்பும் அமைந்திருக்கிறது. அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாதது போல் மாறியுள்ளார். குறிப்பாக, மம்முட்டியின் உடலமைப்பு சொல்ல வேண்டும். தனது 72வது வயதிலும் வயதானவர் என்று சொல்ல முடியாது அளவிற்கு உடம்பை கட்டுகோப்பாக வைத்திருக்கிறார்.

இந்த போஸ்டரில் மம்முட்டி மோனோக்ரோம் அவதாரத்தில், வளைந்த பற்கள் உடன் கோரமான தோற்றத்துடன் இருக்கிறார். மேலும், இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவர் ஹீரோவாக நடிக்கிறாரா அல்லது வில்லனாக நடிக்கிறாரா என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கிய இப்படத்தில் மம்முட்டி தவிர, அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்