#BREAKING: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை!
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம் வெங்கடேஷ், கடந்த மாதம் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி பதிலளிக்க உத்தரவிட்டு, இன்றைக்கு வழக்கை ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தானாக முன்வந்து எடுத்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பொன்முடி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரி லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை வைத்துள்ளது.
அதாவது, சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடியை விடுவித்த வழக்கை, வேறு நீதிபதிக்கு மாற்ற கோரி லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை வைத்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கையை ஏற்று வேறு நீதிபதிக்கு மாற்றுவதா அல்லது தானே விசாரிப்பதா என முடிவெடுக்கப்படும் என தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். வழக்கை தலைமை நீதிபதி அல்லது உரிய அமர்வு முன்பு வைத்து யார் விசாரிப்பது என முடிவெடுக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
விசாரணைக்கு எடுத்த வழக்கில் தெரிவித்த கருத்துக்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக உள்ளது என பொன்முடி தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய அவகாசமுள்ளது, மேல்முறையீட்டுக்கு உகந்த வழக்கா என ஆய்வு செய்து வருகிறோம் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கின் விசாரணையை செப்.14ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.