G20 Summit : சரியான நேரத்தில் ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது.! இங்கிலாந்து பிரதமர் வாழ்த்து.!
இந்த ஆண்டு ஜி-20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தி வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பலப்படுத்தப்பட்டு, விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஜி20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தங்குவது குறித்து இங்கிலாந்து பிரதமரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்திய நாட்டின் அளவு, அதன் பன்முகத்தன்மை மற்றும் அதன் அசாதாரண வெற்றிகள் பலவற்றை அறிந்துளேன்.
ஜி20 தலைமை பதவியை நடத்த சரியான நேரத்தில் இந்தியா சரியான நாடாக உள்ளது. ஜி20ஐ வழிநடத்தும் பிரதமர் மோடியின் தலைமைக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். இந்தியா இத்தகைய உலகளாவிய தலைமையை ஏற்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.