அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் நாடு திரும்பினார்..!
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதற்காக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றா. அதைத்தொடர்ந்து, மும்பை லீலாவதி மருத்துவமனையிலும் சிகிச்சைகள் பெற்றார்.
ஆனாலும், மேல் சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்றார். கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிறைவுற்றுள்ளது. இதையடுத்து, மனோகர் பாரிக்கார் இன்று நாடு திரும்பினார். அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் வந்த மனோகர் பாரிக்கர், மும்பை வந்தார். அங்கிருந்து கோவா செல்கிறார்.