HighCourt: அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்கு பயன்படுத்துக – சென்னை உயர்நீதிமன்றம்

Madras high court

அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக  பயன்படுத்த வேண்டும் என்று அரசியல்வாதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்துள்ளது. அரசியல் அதிகாரத்தை சுயநலனுக்காகவும், பிரச்சனைகளை உருவாக்கவும் பயன்படுத்த  கூடாது. அதிகாரம் மூலம் மக்களுக்கு மிரட்டல், பிரச்னையை ஏற்படுத்துவதை நீதிமன்றம் கைகட்டி வேடிக்கை பார்க்காது என சென்னையில் மூதாட்டி கிரிஜா என்பவர் வீட்டில் திமுக வட்ட செயலர் ராமலிங்கம் வாடகை தராமல் குடியிருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

ஐகோர்ட் உத்தரவை அடுத்து வீடு காலி செய்யப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளின் சொல், செயல் மக்களுக்கு நம்மை அளிக்க கூடிய வகையில் இருக்க வேண்டும். 64 வயதான கிரிஜா என்பவற்றின் வீட்டில் திமுக வட்ட செயலர் ராமலிங்கம் கடந்த 2017 முதல் வாடகை தராமல் குடியிருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்