Stress : மன அழுத்தத்தை வெல்ல முடியுமா..? இதோ உங்களுக்கான தீர்வு..!

stress

மன அழுத்தம் என்பது ஒரு இயற்கையான மனித உணர்ச்சி. இந்த நீண்ட நாட்களுக்கு நீடித்தால்,  உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மன அழுத்தத்தின் அறிகுறிகள் உடல், உணர்ச்சி மற்றும் நடத்தை தொடர்பானவையாக இருக்கும்.

உடல் ரீதியாக தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல், வயிற்றுப்போக்கு, வியர்வை, தசை வலி மற்றும் தூக்க பிரச்சினைகள் ஆகியவை  ஏற்படும். உணர்ச்சி ரீதியாக கோபம், சோகம், பயம், கவலை மற்றும் அமைதியின்மை ஆகியவை ஏற்படும். ஆணைகளை பொறுத்தவரையில், மன அழுத்தம் அதிகமாகும் போது புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருள் பயன்படுத்துதல் போன்ற பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகின்றனர்.

மன அழுத்தம் ஏற்பட வேலை, பள்ளி, நிதி, உறவுகள், உடல்நலம் மற்றும் வாழ்க்கை மாற்றங்கள் ஆகியவை அடங்கும். மன அழுத்தத்தைக் குறைக்க பல வழிகள் உள்ளன. தற்போது இந்த பதிவில் மன அழுத்தத்தை குறைப்பதர்க்கான சில வழிகள் பற்றி பார்ப்போம்.

 சரியான உணவு, போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை சரியான நேரத்திற்கு மேற்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை தூண்டும் சூழ்நிலைகளைக் கண்டறிந்து அதை சமாளிக்க உதவும் திறன்களைக் கற்றுக்கொள்வது மிக சிரண்டஹது.

நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் ஒதுக்கி, அவர்களுடன் மனம் திறந்து பேசுதல் மற்றும் அவர்களுடன் உரையாடுதல் ஆகியவற்றை வழக்கமாக கொள்ள வேண்டும். யோகா, தியானம் அல்லது இசை போன்றவை மன அழுத்தத்தை குறைக்கும். ஓய்வாக உள்ள நேரங்களில், பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்று மன அழுத்தத்தை குறைத்து கொள்ளலாம்.

மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதேசமயம் மன அழுத்தம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் போது, மனநல மருத்துவரை அணுகி, தீர்வு காண்பது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்