ஜம்மு காஷ்மீர்: ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றதால் பரபரப்பு..!

Default Image
ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் அவுரசங்சேப் என்ற பகுதியில் ராணுவ வீரர் ஒருவரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடத்திச்செல்லப்பட்ட ராணுவ வீரரின் இல்லம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ளது.
விடுமுறையில் இருந்த ராணுவ வீரர்,  புல்வமா சென்றிருந்த சமயத்தில், பயங்கரவாதிகள் கடத்திச்சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில், ஹிஸ்புல் முஜாகீதின் பயங்கரவாதி சமீர் டைகருக்கு எதிராக நடைபெற்ற  என்கவுண்டர் சம்பவத்தில்  கடத்திச்செல்லப்பட்ட ராணுவ வீரரும் இடம் பெற்று இருந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, அமைதி நடவடிக்கையின் துவக்கமாக கடந்த ஒரு மாத காலமாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்திவைக்க உத்தரவிட்டு இருந்தது. ஆனால், இந்த வேளையில், பயங்கரவாதிகளின் குற்றச்செயல்பாடுகள் அதிகம் அடைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச்சென்ற உமர் பயாஸ் என்ற இளம் ராணுவ அதிகாரி பயங்கரவாதிகளால் கடத்திச்செல்லப்பட்டதும் மறுநாள், துப்பாக்கிக்குண்டுகள் காயத்துடன் ராணுவ அதிகாரியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவமும் நினைவிருக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்