#KH233: Guts & Guns தரமான சம்பவம்! கையில் துப்பாக்கியுடன் வெறித்தனமாக தயாராகும் கமல்ஹாசன்!

KH233

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ள அடுத்த படத்தின் லேட்டஸ்ட் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை, தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், துப்பாக்கிகளும் தோட்டாக்களுமாக சும்மா தெறிக்க விடுகிறது.

மேலும் அதில், கமல் துப்பாக்கிச்சூடு நடத்துவதை ஸ்லோமோஷனில் காட்டுவது பார்ப்பதற்கே மே சிலிர்க்க வைக்கிறது. பல துப்பாக்கிகளை கொண்டு பயிற்சி செய்யும் கமல் சும்மா மிரட்டியுள்ளார்.

இந்த வீடியோ வைத்து பார்க்கையில், படம் முழுக்கவே ஆக்ஷன் நிறைந்து காணப்படும் என்று தெரிகிறது.  விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘KH233’ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

எச் வினோத் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கவுள்ளது.

இருப்பினும், படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்