Apache RTR 310: 2.81 வினாடியில் 60 கிமீ வேகம்..! அதிரடி காட்டும் “அப்பாச்சி ஆர்டிஆர் 310”..!

Apache RTR 310

முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளரான இரு சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் நிறுவனம் அதன் “அப்பாச்சி ஆர்டிஆர் 310” பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் அறிமுகத்தை டீசர் வீடியோ மூலம் உறுதிப்படுத்திய நிறுவனம், தற்போது இந்தியாவில் இந்த பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

என்ஜின்:

அப்பாச்சி ஆர்டிஆர் 310 ஆனது திரவ-குளிரூட்டப்பட்ட 312.12 சிசி சிங்கிள் சிலிண்டர், ரிவர்ஸ் இன்க்லைன்ட் டிஓஎச்சி என்ஜினைக் கொண்டிருக்கும். இந்த என்ஜின் ஆனது 35 ஹெச்பி மற்றும் 28.7 என்எம் பீக் டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இது ஆறு வேக மாறுபாடு கொண்ட கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும். இந்த பைக் 60 கிமீ வேகத்தை 2.81 வினாடிகளில் எட்டிவிடும் மற்றும் மணிக்கு 150 கிமீ வேகத்தில் செல்லும்.

வடிவமைப்பு:

இந்த மோட்டார்சைக்கிளில் ஸ்பிலிட் எல்இடி ஹெட்லேம்ப் செட்-அப், புதிய லைட்வெயிட் அலுமினிய சப்ஃப்ரேம், ட்வின் டெயில் லேம்ப் போன்ற புதிய அம்சங்கள் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் இருக்கும். இதில் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்களைக் கொண்டிருக்கும். நகர்ப்புறங்கள், மழை, விளையாட்டு மற்றும் ட்ராக் போன்ற நான்கு ரைடிங் மோடுகளுடன் வரும் என்று கூறப்படுகிறது.

அம்சங்கள்:

இதன் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் அம்சங்களைப் பொறுத்தவரை, மல்டிவே கனெக்டிவிட்டி, க்ரூஸ் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், க்ளைமேடிக் கன்ட்ரோல் சீட் மற்றும் சார்ஜிங் போர்ட் ஆகியவற்றைக் கொண்ட 5-இன்ச் டிஎப்டி கிளஸ்டரைக் கொண்டுள்ளது.

விலை:

அப்பாச்சி ஆர்டிஆர் 310-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.43 லட்சம் முதல் ரூ.2.64 லட்சம் ஆகும். டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர் 310-ன் முன்பதிவுகளை இன்னும் தொடங்கவில்லை. இந்த மாத இறுதியில் அல்லது அக்டோபரில் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது இந்தியாவில் அறிமுகமாகியுள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக் ஆனது கேடிஎம் டியூக் 390, பஜாஜ் டோமினார் 400 மற்றும் ட்ரையம்ப் ஸ்பீட் 400 போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்