India – Bharat : புரியாத ஹிந்தி பெயர்கள்.. இந்தியர்கள் மனது புண்படுகிறது.! திமுக எம்பி கனிமொழி பேட்டி.!

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பிற்கு ‘இந்தியா (I.N.D.I.A)’ என பெயர் வைத்து செயல்பட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு இந்தியா (I.N.D.I.A) என இந்திய நாட்டின் பெயர் வரும்படி பெயர் வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியா என்ற பெயரை ஆளும் பாஜக அரசு தவிர்த்து வருகிறது என மத்திய அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்படுகிறது.
தற்போது இந்தியா எனும் பெயருக்கு பதில் பாரத் எனும் பெயரை குறிப்பிட வேண்டும் என்ற குரல் பாஜக ஆதரவாளர்களின் ஒருமித்த குரலாக மாறி வருகிறது. ஜி20 மாநாட்டுக்கான குடியரசு தலைவருக்கு கொடுத்த அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் என குறிப்பிட்டனர். ஏசியன் கூட்ட தொடர் அறிவிப்பில் பாரத பிரதமர் மோடி என குறிப்பிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.