18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது! நீதிபதி எம்.சுந்தர் 134 பக்கங்களை கொண்ட தீர்ப்பினை வழங்கினார்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளித்துள்ளனர்.
காலையில் 6 வழக்குகளின் விசாரணை முடிந்த பிறகு 7வது வழக்காக தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தலைமை நீதிபதி இந்திராபனர்ஜி தீர்ப்பு:
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திராபனர்ஜி தெரிவித்துள்ளார்.சபாநாயகர் உத்தரவில் நீதித்துறை தலையிடக்கூடாது என்பதால் தகுதி நீக்கம் செல்லும் என்றும் சபாநாயகர் உத்தரவை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தக்கூடாது .சபாநாயகரின் முடிவு என்பது உரிய காரணங்களுக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நீதிபதி சுந்தர் தீர்ப்பு:
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதிய அமர்வு தகுதி நீக்க வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை தேர்தல் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.
தற்போது 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி எம்.சுந்தர் 134 பக்கங்களை கொண்ட தீர்ப்பினை வழங்கினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.