South Africa squad: உலகக் கோப்பை 2023க்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!
இந்தியாவில் அக்.5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை 50 ஓவர் உலகக்கோப்பை 2023 தொடர் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் ஆயுதமாகி வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கு 30 நாட்களுக்கு முன்னதாக அணி வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஐசிசி தெரிவித்திருந்த நிலையில், ஒவ்வொரு அணிகளும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணி பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023க்கான டெம்பா பவுமா தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசென் போன்ற அனுபவமிக்க பேட்டர்கள் அணியில் உள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச அரங்கில் அறிமுகமான வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார்.
இதுபோன்று, வேகப்பந்து வீச்சாளர்கள் ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே மற்றும் லுங்கி என்கிடி போன்றவர்கள். குறிப்பாக உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மீதும் தென்னாபிரிக்கா கவனம் செலுத்தி உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கேசவ் மகராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்சியில் உள்ளனர். எனவே, தென்னாப்பிரிக்கா தனது உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக அக்டோபர் 7-ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் களமிறங்குகிறது. அதற்கு முன்னதாக, செப்டம்பர் 29-ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், அக்டோபர் 2-ஆம் தேதி நியூசிலாந்திற்கு எதிராகவும் பயிற்சி ஆட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்கா அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசண்டா மகலா, கேசவ் மஹராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ட்ஜே, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் உள்ளனர்.
???? BREAKING: South Africa have announced their 15-member #CWC23 squad.
Details ????
— ICC (@ICC) September 5, 2023