Free Fire: நாங்க இன்னைக்கு அறிமுகம் செய்யவில்லை..! ஆரம்பத்திலேயே யூ-டர்ன் அடித்த கரெனா..!

Free Fire

ஃப்ரீ ஃபயர் (Free Fire) என்பது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்க்காக கரேனாவால் (Garena) உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட இலவச பேட்டில் ராயல் கேம் ஆகும். இந்த ஆன்லைன் கேம் ஆனது 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி வெளியிடப்பட்டது. முதலில் 100 எம்பிக்கும் குறைவான அளவில் வெளியிடப்பட்ட இந்த கேமில் கிராபிக்ஸ் காரணாமாக பலரும் இதை பதிவிறக்கம் செய்து விளையாடவில்லை.

ஆனால், காலப்போக்கில் இதற்கு ரசிகர்கள் அதிகாமாக, 2019 ஆம் ஆண்டில் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் கேம் ஆனது. அதோடு மட்டுமல்லாமல் கூகுள் பிளே ஸ்டோரில் 1 பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றது. 2021 இல் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த மொபைல் கேம் ஆனது. இதன்பிறகு,  ஃப்ரீ ஃபயரில் பல கிராபிக்ஸ் மாற்றங்கள் செய்யப்பட்டது.

இதில் இருக்கும் கேரக்டர்களுக்கு தேவைப்படும் ஆடைகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு தேவைப்படும் ஸ்கின் போன்றவற்றை வாங்குவதற்கு பணம் செலுத்த வேண்டியது இருந்தது இருப்பினும் பலரும் இதில் தங்களது பணத்தை செலுத்தி அதில் இருக்கும் டைமண்ட் என்பதை வாங்கி தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்கின்றனர்.

இதனை அடுத்து, கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய அரசாங்கம் இந்தியாவில் 53 சீன பயன்பாடுகளை தடை செய்தது. அந்த 53 பயன்பாடுகளுடன் சேர்த்து ஃப்ரீ ஃபயரும் தடை செய்யப்பட்டது. தேசத்தின் பாதுகாப்பு குறித்த கவலை காரணமாக தடை விதிக்கப்பட்டது இருப்பினும் இந்த கேம் பல மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய விதிமுறைகள் உடன் இந்தியாவில் மீண்டும் வரும் என்று அதன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக கரேனா ஃப்ரீ ஃபயர் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஃப்ரீ ஃபயரின் பிராண்ட் அம்பாசிடராக கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் இந்த செப்டம்பர் 5ம் தேதி பிரீ பையர் ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இதனால் கேமிங் ரசிகர்கள் மற்றும் யூடியூபர்கள் உட்பட மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், தற்போது யூ-டர்ன் அடித்து அந்த வெளியீட்டை சில வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது, முன்னதாக செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஒரு தேதியைக் கூறியது. ஆனால் இப்போது ஒத்திவைக்கப்பட்ட தேதி குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.

இதுகுறித்து கூறிய ஃப்ரீ ஃபயர் இந்தியா “ஃப்ரீ ஃபயரின் அறிமுகம் குறித்த அறிவிப்புக்கு ரசிகர்களிடமிருந்து உற்சாகமான பதில்களை பெற்றதால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் ரசிகர்கள் அனைவரும் தொடக்கத்தில் இருந்தே நல்ல கேமிங் அனுபவத்தை பெற, எங்களது வெளியீட்டை இன்னும் சில வாரங்களுக்கு ஒத்தி வைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள்:

இதில் அரசாங்கம் விதித்த விதிமுறைகளின் படி, இதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலில் விளையாடும் நேரம் ஆனது குறைக்கப்பட்டுள்ளது. 13 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மூன்று மணி நேரமும், 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஒரு நாளுக்கு ஆறு மணி நேரம் மட்டுமே விளையாட முடியும்.

அதில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பிரேக் எடுப்பதற்கு நோட்டிபிகேஷன் ஆனது வழங்கப்படும். இதனிடையே ஒவ்வொரு போட்டிக்கு செல்லும் பொழுதும் இது ஒரு போலியான உலகம் என்று அறிவிப்பு ஆனது தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்