VENKATESAN MP : ‘கழுத்தை வெட்டு காசு கொடுக்கிறேன்’ – அதுதான் சனாதனம் : சு.வெங்கடேசன்எம்.பி

M.P venkatesan Neet

சென்னையில் சமீபத்தில் சனாதனம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும். இந்த சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்பது நிலையானது, அதாவது மாற்ற முடியாதது.

அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அந்த புகைப்படத்தை எரித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், சனாதன கொள்கைக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள், ‘சனாதனத்தை ஆதரித்து ஆளுங்கட்சியினர் நாடாளுமன்றத்திலும், ஆளுநர் நாடெங்கும் பேசலாம். அது நேர்மையோடு எதிர்கொள்ளப்படும். அதுவே ஜனநாயகம். ஆனால் சனாதனத்தை எதிர்த்துப் பேசினால் நேர்மைக்கு வேலையில்லை. “கழுத்தை வெட்டு காசு கொடுக்கிறேன்” என்ற சல்லித்தனமே அரங்கேறும். அதுதான் சனாதனம்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்