Flipkart Job: ஒரு லட்சம் பேருக்கு வேலை இருக்கு..! வெளியான அதிரடி அறிவிப்பு.!

Flipkart

இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் “பிக் பில்லியன் டேஸ் 2023” என்பது மற்ற நாட்களை விட அதிக அளவில் விற்பனை நடக்கும் நாளாகும். இந்த நாளில் வீட்டு உபயோக பொருட்கள் முதல் ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக சலுகைகளை வழங்கப்படும். இதனால் பலதரப்பட்ட மக்களும் தங்களுக்குத் தேவையான பொருட்களை அதிக அளவில் ஆர்டர் செய்வார்கள்.

இந்த நேரத்தில் அதிக அளவில் ஆர்டர்கள் வரும் என்பதால் அதனை சாமளித்து, மக்களுக்குத் தேவையானவற்றை சரியான நேரத்தில் அவர்களிடம் கொண்டு சேர்க்க, ஃபிளிப்கார்ட் 1 லட்சத்துக்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, டெலிவரி மையங்கள் மற்றும் ஆர்டர்களை பெறும் மையங்கள் உட்பட அதன் விநியோகச் சங்கிலி முழுவதும் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளது.

ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் ஆனது அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று வதந்திகள் பரவும் நிலையில், நிறுவனம் இந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க தயாராகி வருகிறது. ஃபிளிப்கார்ட் நிறுவனம் ஏற்படுத்தும் இந்த வேலை வாய்ப்பில் உள்ளூர் டெலிவரி பார்ட்னர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஃபிளிப்கார்ட் குழுமத்தின் வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் மறு வணிகத்தின் மூத்த துணைத் தலைவரும், சப்ளை செயின் தலைவருமான ஹேமந்த் பத்ரி கூறுகையில், “இந்த ஆண்டு நாங்கள் எங்கள் நிறுவனத்தின் விநியோக சங்கிலியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். அதே நேரத்தில் நாடு முழுவதும் எங்கள் நிறுவனத்தின் சேவைகளை கொண்டு சென்று வலுப்படுத்துவதன் மூலம் பல புதிய திட்டங்களில் முதலீடுகளை செய்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இதன்பிறகு, பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு அவர்கள் செய்யும் வேலைக்கான பயிற்சி அளிக்கப்படும். அதில் ஸ்கேனர்கள், பல்வேறு மொபைல் பயன்பாடுகள் மற்றும் பல பயன்பாடுகளை கையாள பயிற்சி அளிக்கப்படும் என்று ஃபிளிப்கார்ட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்