Tiruchendur Murugan Temple : திருச்செந்தூர் முருகன் கோவில் காணிக்கை.! தங்க கட்டிகளாக முதலீடு.!
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாகவும், கடல் அருகே உள்ள திருத்தலமாகவும் உள்ள திருத்தலம் தான் திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவில் (முருகன் கோவில்) உண்டியல் காணிக்கைகளில் வந்த தங்கத்தை தமிழக அரசு முதலீடு செய்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வந்த தங்க கட்டிகளை துங்கபத்திர முதலீட்டில் முதலீடு செய்து அதற்குரிய பத்திரத்தை இன்று கோவில் அறங்காவலர் குழு தலைவரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். உடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இருந்தார்.
கடந்த ஜூன் மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் போது, 3 கோடியே 10 லட்ச ரூபாய் பணமும், 2.8 கிலோ தங்கமும், வெள்ளி 25 கிலோவும், கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.