#Result: 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீட்டு முடிவுகள் இன்று வெளியீடு!

Tamilnadu School Students

11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது.

அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in இல் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பட்டியலில், இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாளில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, அண்மையில் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. சுமார், 30 ஆயிரம் பேர் இந்த துணை தேர்வுகளை எழுதினர்.  இந்நிலையில், 11, 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்