வீட்டின் அருகே மது அருத்தியதை தட்டிக் கேட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை!
திருப்பூர் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்ட போது, போதையில் இருந்தவர் அக்குடும்பத்தை சேர்ந்த 4 பேரையும் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது.
அதில், மோகன்ராஜ், ரத்தினாம்பாள், புஷ்பவதி மற்றும் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தற்பொழுது, உயிரிழந்தவர்களின் உடல்களை எடுக்க விடாமல் கொலையாளியை கைது செய்யக்கோரி ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வீட்டின் அருகே மது அருந்தியவரை தட்டிக்கேட்டதால் தான் கொலையா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.