KanimozhiMP Greetings: வெற்றியடைந்த ஆதித்யா எல்-1..! விஞ்ஞானி நிகர் ஷாஜிக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து.!

kanimozhi

இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி, 14 நாள் நிலவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.  இதனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் நோக்கி இஸ்ரோ ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை விண்ணில்  செலுத்தியது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து இன்று காலை 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி.- சி57 ராக்கெட் மூலம் “ஆதித்யா எல்-1” விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு தற்போது புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பணிபுரிந்துள்ளார். அதன்படி, ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக தென்காசியை சேர்ந்த நிகர்ஷாஜி பணியாற்றியுள்ளார். தற்போது சூரியனை நோக்கிய பயணத்தை ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாகத் தொடங்கிய நிலையில், நிகர் ஷாஜிக்கு கனிமொழி எம்.பி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில், “சூரியன் குறித்த ஆய்வுகளுக்காக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குநர், தென்காசியைச் சேர்ந்த திருமிகு. நிகர் ஷாஜி அவர்களுக்கு வாழ்த்துகள். நம் நாட்டின் விண்வெளி துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல்கல்லாக இருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்