RSShivaji : நான் உயிரோட இருக்க காரணம் கமல் சார் தான்! மறந்த ஆர்.எஸ்.சிவாஜியின் உருக்கமான வீடியோ!
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து படத்தில் ஜனகராஜிடம் “சார்… நீங்க எங்கயோ போயிட்டீங்க” என்ற வசனத்தை பேசியதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி. இவர் இதய பாதிப்பால் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று காலை காலமானார்.
இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆர்.எஸ்.சிவாஜி இறப்பதற்கு முன்பு கமல்ஹாசன் பற்றி பேசிய உருக்கமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய அவர் ” நான் இன்று உயிரோடு இருக்க முக்கிய காரணமே கமல்சார் தான்.
என்னுடைய இதயத்தில் 4 அடைப்புகள் இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மருத்துவர்களிடம் கமல் சார் சொல்லிட்டார் இவரை எப்படியாவது நோயிலிருந்து வெளியே கொண்டு வரவேண்டும் என்றும் எவ்வளவு செலவு ஆனாலும் சரி அவரை குணப்படுத்தவேண்டும் என்று கூறினார்.
என்னோட உடம்புல நாலு ப்ளாக் இருக்கு கோவிட் டைம்ல என்னால மருந்து வாங்க முடியல, #கமல் சார்ட கேட்டேன் இன்னைக்கு வரைக்கும் மாசம் ஆனா ராஜ்கமல் ஆபிசில் இருந்து மருந்து வந்துட்டே இருக்கு நான் விடும் மூச்சு, நான் உயிரோட இருக்க காரணமே கமல் சார் தான் – @rsshivaji❤️ pic.twitter.com/GpfFYkPxcr
— SundaR KamaL (@Kamaladdict7) September 2, 2023
பிறகு கோவிட் நேரத்தில் என்னால மருந்து வாங்க முடியல, பண ரீதியாக எனக்கு சிக்கல் ஏற்பட்டது. பிறகு கமல் சார்ட எனக்கு உதவி செய்யமுடியுமா? என்று கேட்டேன் . இன்னைக்கு வரைக்கும் மாசம் ஆனா ராஜ்கமல் அலுவலகத்தில் இருந்து மருந்து வந்துட்டே இருக்கு நான் விடும் மூச்சு, நான் உயிரோட இருக்க காரணமே கமல் சார் தான்.
அதனால் நான் எப்போதும் எந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தாலும் உடனடியாக கமல்சார் படங்களில் நடிக்க அழைத்தால் உடனடியாக ஓடி சென்றுவிடுவேன். கமல் சார் செய்த உதவிக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று கூட எனக்கு தெரியவில்லை” எனவும் ஆர்.எஸ்.சிவாஜி தெரிவித்துள்ளார். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் கமல்ஹாசனை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.