Aditya L-1 : நமது அயராத அறிவியல் முயற்சிகள் தொடரும்… பிரதமர் மோடி வாழ்த்து.!
இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி, 14 நாள் நிலவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் நோக்கி இஸ்ரோ ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து இன்று காலை 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி.- சி57 ராக்கெட் மூலம் “ஆதித்யா எல்-1” விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு தற்போது புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
ஆதித்யா-L1 விண்ணில் ஏவப்பட்ட பிறகு அதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அதில், சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு, இந்தியா தனது விண்வெளிப் பயணத்தைத் தொடர்கிறது. நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்தியாவின் முதல் சோலார் மிஷன் (சூரியசக்தி பற்றிய ஆய்வுகள்), ஆதித்யா -L1 இன் வெற்றிகரமான ஏவபப்பட்டது. மனிதகுலத்தின் நலனுக்காக பிரபஞ்சத்தைப் பற்றிய சிறந்த புரிதலை வளர்ப்பதற்காக நமது அயராத அறிவியல் முயற்சிகள் மேலும் தொடரும் என பிரதமர் மோடி தனது X சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.