Rohit Sharma : ஆசிய கோப்பை என்றால் இந்தியா – பாகிஸ்தான் மட்டுமில்லை! கேப்டன் ரோஹித் ஷர்மா பேச்சு!

Rohit Sharma

16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறு  வரும் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இந்நிலையில், இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா ஆசியா கோப்பை தொடர் என்பது இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமில்லை

இது குறித்து பேசிய ரோஹித் ஷர்மா ” ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலானது என்று யாரும் கூறக்கூடாது. இதில் இன்னும் 4 அணிகள் இருக்கிறது. குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றார்கள். எனவே, ஆசிய கோப்பையை யார் வேண்டுமானாலும் வெல்லலாம் என்பதால் யாரையும் எண்ணிவிட முடியாது” என தெரிவித்துள்ளார்.

ஒரு அணியைப் பற்றியது அல்ல

“உலககோப்பை போலவே ஆசியகோப்பை போட்டியும்  ஒரு அணியைப் பற்றியது அல்ல, எனவே எல்லா அணிகளும் சிறந்த அணி தான் நாம் அதனையும் கவனிக்கவேண்டும். ஆசிய கோப்பை என்பது ஒரு நல்ல போட்டியாகும், ஏனென்ற, நாம் அங்கு எப்படி விளையாடுகிறோமோ அதே போல தான் உலககோப்பை தொடரிலும் விளையாடுவோம். எனவே, இது ஒரு நல்ல போட்டியாகவே ஆசிய கோப்பை பார்க்கிறேன்” எனவும் ரோஹித் தெரிவித்தார்.

சரியான நேரம்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கியுள்ளது. எனவே, இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் எங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறேன். எனவே உலகக்கோப்பையில் அருமையாக செயல்பட நாங்கள்  இந்த ஆசிய கோப்பை போட்டியை விளையாட சரியான வாய்ப்பு.  ஆசியக் கோப்பையில் சிறப்பாக விளையாடி, உலகக் கோப்பையின் போட்டிக்கு தயாராகி வருவது தான் எங்களுடைய நோக்கம்” எனவும் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்