Virat Kohli : என்னது விராட் கோலி இடத்தை மாற்றபோறீங்களா? கோபத்தில் கொந்தளித்த கவாஸ்கர்!

Sunil Gavaskar angry

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கையில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் விளையாடும் இரண்டு அணி வீரர்களும் தற்போது பல்லேகல மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் விராட் கோலி 3-வது இடத்தில் தான் களமிறங்கவேண்டும் அப்போது தான் அவர் இன்னும் அருமையாக விளையாடுவார் என கூறியுள்ளார். ஏனென்றால்,  தற்போது ஆசியகோப்பை இந்திய அணியில் திலக்வர்மா, ஷ்ரேயாஷ் ஐயர், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளதால் அவர்களில் யாராவது 3-வது இடத்தில் இறங்கி விளையாட வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் பரவியது.

இதனால் விராட் கோலி நம்பர் 4-லில் விளையாடுவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்ததால் சுனில் கவாஸ்கர்  தற்போது மூன்றாவது இடத்தில் விராட் கோலி இதுவரை அருமையாக பேட்டிங் செய்தார், அதை அவர்கள் ஏன் மாற்ற வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

விராட்டுக்கு அதுதான் வெற்றி இடம் 

விராட் கோலியின் நம்பர் 3 இடத்தை பற்றி பேசிய சுனில் கவாஸ்கர் “விராட் கோலி சிறந்த வீரர் அவர் அதிகபட்ச ஓவர்களில் களமிறங்கி பேட் செய்ய வேண்டும், அது தான் நம்மளுடைய அணிக்கு பக்க பலமாக இருக்கும். விராட் மூன்றாவது இடத்தில் இறங்கினால் அவருக்கு அதிகபட்ச ஓவர்கள் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும், அதனால் என்னைப் பொறுத்த வரையில், அவர் மகத்தான வெற்றியைப் பெற்ற இடம் அது என்று நான் நினைக்கிறேன்” என கங்குலி கூறியுள்ளார்.

பல சதங்களைப் படைத்துள்ளார்

விராட் கோலி நம்பர் 3-லில் இறங்கி படைத்த சாதனைகளை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது உங்களுக்குத் தெரியும். அவர் பல சதங்களை அந்த இடத்தில் களமிறங்கி அடித்துள்ளார். அதுமட்டுமின்றி பல சாதனைகளை தன்னுடைய பேட்டிங்கின் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார். எனவே, அந்த ராசியான விராட் கோலியின் இடத்தை ஏன் அவர்கள் ஏன் மாற்ற வேண்டும்?” என கவாஸ்கர் காட்டத்துடன்  கேள்வியும் எழுப்பினார்.

மாற்றவே கூடாது 

மேலும், தொடர்ந்து பேசிய கவாஸ்கர் ” நான் உறுதியாகவே சொல்கிறேன் விராட் கோலி அந்த இடத்தில் அசைக்க முடியாதவராக இருக்கிறார். எனவே அவருடைய இடத்தை மாற்றுவது எனக்கு சரியாக படவில்லை. அவரை எப்போதும் வழக்கம் போல நம்பர் 3லில் விளையாட வைக்கவேண்டும்” எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்