RBI : இம்மாதமே கடைசி.! 24,000 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளது…

2000 Rupees Note

கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கியானது மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது இனி 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், இம்மாதம் (செப்டம்பர்) 30க்குள் மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தி இருந்தது.

செப்டம்பர் மாதம் தொடங்கிய நேரத்தில் தற்போதுவரை எவ்வளவு மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. எவ்வளவு மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இதுவரை 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இன்னும் 24,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 93 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளன.

2000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவதற்கென எந்தவித அடையாள அட்டைகளும் கொண்டு செல்லப்பட வேண்டியதில்லை. வங்கியில் கணக்கு வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருநாளைக்கு 20,000 ரூபாய் வரையில் ரூபாயாகவே மாற்றிக்கொள்ளலாம். ஆனால், ஏற்கனவே நடப்பில் உள்ள வங்கி விதிமுறைகளான 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்யும் போது பான் கார்டு விவரங்களை கொடுப்பது மற்றும் அந்தந்த வங்கிகளுக்கு என இருக்கும் விதிமுறைகள் ஆகிய விதிமுறைகள் நடப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்