Chandrayaan-3: பாடப்புத்தகங்களில் சந்திராயன் 3 திட்டம் இணைக்கப்படும்.! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி.!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து, சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கிய பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கி, நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நிலவை ஆய்வு செய்வதற்கான ‘சந்திரயான் 3′ திட்டத்தின் வெற்றி குறித்து பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், “சந்திரயான் 3 திட்டம் குறித்து கண்டிப்பாக பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு ஏவுதலின் போது எவ்வாறு இருந்தார்கள் என்று தெரியவில்லை ஆனால் இந்த முறை அனைவரும் தொலைக்காட்சி முன்பு அவர்கள் விட்டோம்”
“ஏனென்றால் இதன் செயல்பாடுகளை குறித்து ஏற்கனவே கூறிவிட்டார்கள் இது எவ்வாறு செயல்பட போகிறது, எவ்வாறு தரையிறங்கப் போகிறது என்பது குறித்து கூறியதால் அதே கவனிக்க ஆரம்பித்து விட்டோம். இதில் இரண்டு விஷயம் உள்ளது. ஒன்று நமது நாட்டுக்கான பெருமை. மற்றொன்று அதில் ஈடுபட்டவர்கள் எல்லாம் நம்முடைய தமிழ்நாட்டின் அரசு பள்ளி என்பது கூடுதல் பெருமையாக இருக்கிறது”
“எனவே. அதன் செயல்பாடுகளில் இருந்து உலகில் நான்காவது நாடாக வெற்றி அடைந்திருக்கிற நிலை வரையிலாவது அடுத்த கல்வியாண்டில் பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெற என்று எனது ஆசையாக இருக்கிறது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறேன்” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.