காவிரி வழக்கு – வரும் 6-ஆம் தேதி விசாரணை : உச்சநீதிமன்றம்
இன்று காவிரி வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கபாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இன்று ஜம்மு காஷ்மீர் மாநில வழக்கானது விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதி பி.ஆர்.கபாய் தலைமையிலான அமர்வு முன்பதாக முறையிட்டனர்.
காவிரி வழக்கு மிக முக்கியமான வழக்கு என்பதால் இந்த வழக்கை உடனடியாக விசாரணை எடுக்குமாறு பரிந்துரைத்தனர். திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்ட நிலையில், நீதிபதி பி.ஆர்.கவாய் திங்கட்கிழமையும் ஜம்மு காஷ்மீர் தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட இருப்பதால் இந்த வழக்கை செப்டம்பர் 6-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை முறையாக வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.