BMW X7 : ரஜினிகாந்த் பரிசாக வாங்கிய காரில் இத்தனை அம்சங்களா? விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நடிகர் ரஜினிகாந்திற்கு படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் BMW X7 காரை பரிசாக வழங்கினார். அந்த காரில் என்னென்ன சிறப்பம்சம் உள்ளது என்பதை விவரமாக பார்க்கலாம்.
ஜெயிலர் வெற்றிக்கு கார் பரிசு
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பலத்த சாதனைகளை படைத்தது. ஜெயிலர் திரைப்படத்தின் வரலாற்று வெற்றியை கொண்டாடும் வகையில், நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நேரில் BMW i7 மற்றும், BMW x7 என இரண்டு கார்களுடன் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சென்றுள்ளார்.
சென்றுவிட்டு ரஜினியை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து இரண்டு கார்களில் எது வேணுமோ அதனை தேர்வு செய்யுங்கள் என்று கூறிவிட்டார். அதற்கு உடனே ரஜினிகாந்த் 1.24 கோடி மதிப்பிலான BMW X7 காரை ரஜினிகாந்த் தேர்வு செய்தார்.
BMW X7 காரின் விலை
ரஜினிகாந்த் தேர்வு செய்து பரிசாக பெற்றுக்கொண்ட BMW X7 காரின் விலை இந்தியாவில் 1.24 கோடி ரூபாய் . அதைப்போல BMW i7 காரின் விலை 1.95. இதில் ரஜினிகாந்த் தேர்வு செய்துள்ள BMW X7 ஆனது 1 டீசல் எஞ்சின் மற்றும் 1 பெட்ரோல் இன்ஜின்களை வழங்குகிறது. டீசல் இன்ஜின் 2993 சிசி, பெட்ரோல் இன்ஜின் 2998 சிசியை கொண்டுள்ளது.
BMW X7 6 பேர் இருக்கை
BMW X7 காரில் 6 பேர் செல்வது போல சொகுசான இருக்கைகள் உள்ளது. எனவே, இந்த காரில் 2 பெரியவர்கள் சென்று 6 சிறுவர்கள் கூட தாராளமாக செல்லலாம். பெரியவர்கள் சென்றால் 6 பேர் ஓட்டுனருடன் சேர்ந்து செல்லலாம். இந்த கார் 1 லிட்டருக்கு 11.29 முதல் 14.31 மைலேஜ் கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.
புதிய அம்சம்
இந்த காரில் BMW X7 இன் டாஷ்போர்டில் வளைந்த கண்ணாடி டிஸ்ப்ளே கிடைக்கிறது. சுற்றுப்புற விளக்குகள் 14 வண்ணங்களில் இருக்கிறது. அதைப்போல, இந்த காருக்குள் அமர்ந்திருந்தால் இருக்கைகளில் சாய்ந்திருப்பது, மசாஜ் செய்வது போல ஒரு உணர்வை கொடுக்குமாம். இதைப்போல இந்த கார் பல வசதிகளைக் கொண்டுள்ளது.
மினி தியேட்டர் தான்
BMW X7 கார் இது 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஒலி அமைப்பையும் பெறுகிறது. எனவே காருக்குள் அமர்ந்து கொண்டு பாடல்கள் அல்லது படம் பார்த்தால் கூட நமக்கு ஒரு சின்ன திரையரங்கில் இருப்பது போல உணர்வை கொடுக்கும். மற்றபடி, காரின் உட்புறம் பெரிய அளவில் இருப்பதால் தேவையான பல பொருட்களை நாம் இந்த காருக்குள் வைத்து கொண்டு செல்லலாம்.
இரண்டு இன்ஜின்களும் BMW இன் ட்வின்-டர்போ தொழில்நுட்பம் மற்றும் 4 டிரைவிங் மோடுகளுடன் 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் கியர்களை இந்த கார் கொண்டுள்ளது. மேலும், இந்த X7 கார் இந்தியாவில் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.