மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கிய வன்முறை: 8 பேர் உயிரிழப்பு!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. ஆகஸ்ட் 29 முதல் பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், சமூக சீர்த்திருத்த பாடல்களை எழுதி வந்த உள்ளுர் பாடலாசிரியர் எல்.எஸ்.மங்போய் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 4 மாதங்களாக நடந்துவரும் வன்முறையில், இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.