டெல்லியில் ஜி20 மாநாடு.! சீன அதிபர் அதிபர் பங்கேற்க்கவில்லை.!
இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா போன்ற 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஜி20 கூட்டமைப்பானது இந்த வருடம் இந்தியா தலைமையின் கீழ் ஆலோசனை கூட்டங்களை மேற்கொள்கிறது
ஜி20 கூட்டமைப்பு ஆலோசனை குழுவானது 20 நாடுகளுக்கு இடையேயான பல்வேறு துறைகள் குறித்து அந்ததந்த துறை அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டமானது இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அடுத்த வாரம் தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஜி20 கூட்டமைப்பில் ஒரு உறுப்பினராக இருக்கும் சீனாவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீன அதிபர் ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீன அதிபருக்கு பதிலாக சீன பிரதமர் லி கியாங்க் பங்கேற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உக்ரைன் நாட்டுடனான போரின் காரணமாக ரஷ்ய அதிபர் புடினும் கலந்துகொள்ளவிள்லை என்பது குறிப்பிடத்தக்கது.