பாகிஸ்தானில் அவர் இருந்தா என்ன? இந்திய பேட்ஸ்மேன்கள் பாத்துப்பாங்க – கங்குலி!
ஆசியகிரிக்கெட் 2023 கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகிறது. அந்த போட்டியை காண தான் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துள்ளனர். போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், இரண்டு அணி வீரர்களும் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
இதற்கிடையில், பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி இந்திய அணியின் பேட்ஸ் மேன்களுக்கு சவாலாக அமைவார் என்றும், அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய வீரர்களுக்கு சற்று சிரமாக இருக்கும் எனவும் ஆஸ்ரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்றாலும், அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் இருக்கிறார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கங்குலி ” சர்வதேச கிரிக்கெட்டில் ஷஹீன் அப்ரிடி ஒரு சிறந்த பந்து வீச்சாளர். ஆனால், அதற்காக எல்லா போட்டியிலும் அவரால் சிறப்பாக பந்துவீசிட முடியாது. அவரைப்போலவே ஒவ்வொரு அணியிலும் இதுபோன்ற இரண்டு பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க், பாட்கம்மின்ஸ் உள்ளனர். அவர்களை போல வீரர்களை அருமையாக எதிர்கொண்டு விளையாடுவதற்கு இந்தியாவிடம் பேட்ஸ்மேன்கள் உள்ளனர்’. என பாகிஸ்தானில் அவர் இருந்தா என்ன? இந்திய பேட்ஸ்மேன்கள் பாத்துப்பாங்க என்பது போல கூறினார்.
எனவே, அதைப்போல ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சையும் எதிர்கொள்ள இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்” என கங்குலி கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய கங்குலி கடந்த காலத்தில் இந்திய அணி எப்படி இருந்தது என்பது குறித்தும் பேசினார். இது குறித்தும் பேசிய அவர் ” கடந்த காலத்தில் நாங்கள் மிகச் சிறந்த அணியாக இருந்தோம், அந்த சமயம் எல்லாம் தொடர்ச்சியாக வெற்றி பெறத் தொடங்கியிருந்தோம். எங்களிடம் சில அற்புதமான வீரர்கள் இருந்தனர். எனவே புதிய புதிய வீரர்களை மாற்றாமல் ஒரே வீரர்களை வைத்து தான் வெற்றிபெற்றோம் ” எனவும் கங்குலி தெரிவித்துள்ளார்