கச்சத்தீவு விவகாரத்தில் தலையிட முடியாது – மதுரை உயர்நீதிமன்ற கிளை

Madurai High Court

உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், சென்னையை சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர், கச்சத்தீவை மீட்பது தொடர்பான மனுவை தாக்கல்  செய்திருந்தார். அந்த மனுவில், இந்தியா சுதந்திரமடைந்த பின், கச்சத்தீவு ராமேஸ்வரத்தில் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா-இலங்கை இடையே செய்துகொண்ட உடன்படிக்கை படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த உடன்படிக்கையில், பாரம்பரியமாக மீன்பிடி தொழில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்தவொரு இடையூறும் செய்யப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து மீனவர்களுக்கு இடையூறு அளிக்கப்படுவதாகவும், இலங்கையில் கைதான 22 மீனவர்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்தியா-இலங்கை இடையே செய்துகொண்ட உடன்படிக்கையை ரத்துசெய்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக மீனவர்களை மீட்பதற்கான தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

மேலும் கச்சத்தீவு விவகாரம் குறித்து நீதிபதிகள், கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என, கச்சத்தீவு தொடர்பான வழக்கை முடித்து வைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்