தூத்துக்குடி : வடமாநிலத்தவர் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் கடையில் பயங்கர தீ விபத்து.!

Thoothukudi Fire Accident

தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் வடமாநிலத்தை சேர்ந்தவர் ஒருவர் இருசக்கார வாகன உதிரிபாகங்கள் கடை நடத்தி வருகிறார். அவர் இன்று வழக்கம் போல காலையில் தனது கடையினை திறக்க முற்படுகையில் உள்ளே இருந்து தீ பற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

உடனடியாக சுதாரித்து கடையில் இருந்த சில பொருட்களை மட்டும் வெளியே எடுத்து வைத்துள்ளனர் . ஆனால் அதற்குள் தீ முதல் மாடி வரையில் பரவியுள்ளது. அந்த கடையில் வாகன உதிரி பாகங்கள் மட்டுமின்றி வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எஞ்சின் ஆயில் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததால் அந்த தீ வேகமாக பரவியது என கூறபடுகிறது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
a RASA - Sekar Babu
krishnamachari srikkanth ravichandran ashwin
MKStalin TNAssembly
Nithyananda
divya bharti gv prakash