நிலவில் இருப்பது எரிமலையா?, விண்கல்லா.? புதிய கனிமத்தை கண்டுபிடித்த பிரக்யான் ரோவர்..!
கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது, ரோவரில் உள்ள ஆல்பா துகள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி, சல்பர் (எஸ்) இருப்பதை கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட பதிவில், “ரோவரில் உள்ள ஆல்பா துகள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் (APXS) கருவி, ரோவர் இருக்கும் இடத்தில் சல்பர் (எஸ்) மற்றும் பிற சிறிய கூறுகளைக் கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளது. Ch-3 இன் இந்த கண்டுபிடிப்பு, அப்பகுதியில் உள்ள கந்தகத்தின் (S) மூலத்திற்கான காரணம் எரிமலையா?, விண்கல்லா? என்பதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகளை தூண்டுகிறது.”
“18 செமீ உயரமுள்ள ஆல்பா துகள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவியைச் சுழலும் ஒரு தானியங்கி மெக்கானிசம் ஆனது, சந்திர மேற்பரப்புக்கு அருகாமையில் டிடெக்டர் தலையை சுமார் 5 செமீ வரை சீரமைப்பதை வீடியோ காட்டுகிறது.”
“ஆல்பா துகள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி ஆனது அகமதாபாத் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் (SAC) ஆதரவுடன் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தால் (PRL) உருவாக்கப்பட்டது, அதேசமயம் பெங்களூரு யூஆர் ராவ் செயற்கைக்கோள் மையம் (URSC) வரிசைப்படுத்தல் பொறிமுறையை உருவாக்கியுள்ளது.” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
In-situ Scientific ExperimentsAnother instrument onboard the Rover confirms the presence of Sulphur (S) in the region, through another technique.
The Alpha Particle X-ray Spectroscope (APXS) has detected S, as well as other minor elements.
This… pic.twitter.com/lkZtz7IVSY
— ISRO (@isro) August 31, 2023