#Chandrayaan-3: மீண்டும் விக்ரம் லேண்டரை கிளிக் செய்தது பிரக்யான் ரோவர்!

ISRO

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது. லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது, நிலவின் தென் துருவத்தில் இருந்து 600 கிமீ தொலைவில் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் நிலவில் பல தனிமங்கள் இருப்பதை ரோவர் கண்டறிந்துள்ளது.

நிலவின் தரையில் இறங்கி நடந்து வரும் பிரக்யான் ரோவர். தனது கேமரா மூலம் விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இதுவரை லேண்டரில் இருந்து புகைப்படம் பிடிக்கப்பட்டு வந்த நிலையில், ரோவர் உடைய புகைப்பட கருவி இயங்க தொடங்கியுள்ளது. அதன்படி, சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை நேற்று இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மற்றொரு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

பிரக்யான் ரோவர் எடுத்துள்ள விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ, மீண்டும் ஒருமுறை, இந்த புகைப்படம் இந்திய நேரப்படி காலை 11 மணியளவில் சுமார் 15 மீட்டரிலிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரோ நிலவின் தென் துருவத்தில் சல்பர், ஆக்சிஜன் ரோவரில் உள்ள LIBS ஆய்வு கருவி கண்டறிந்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஆக்சிஜன் கண்டறியப்பட்ட நிலையில், ஹைட்ரஜனை தேடும் பணியில் ரோவர் உள்ளது. இரும்பு, குரோமியம், டைட்டானியம், அக்னிசியம் சிலிக்கான் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளதையும் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்