தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும்.! தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை.!
சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தை கலைஞர் கட்டிய ஓமந்தூரார் தலைமைச் செயலக கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என தலைமைச் செயலக சங்கம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி என்பது பெரிய பிரச்சனையாக உள்ள காரணத்தாலும், போதிய இடவசதி இல்லாததால் அமைச்சர்கள் துறைரீதியான கூட்டங்களை நடத்துவதில் சிரமம் ஏற்படுவதாலும், தலைமைச் செயலக வளாகம் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், தலைமைச் செயலக பணியாளர்களின் இடர்பாடுகளை போக்க அரசின் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தியுள்ளது.