தொடர்ச்சியாக முத்தம் வாங்கும் அனிருத்! ஜவான் இசை வெளியீட்டு விழாவில் யார் கிட்ட தெரியுமா?
இசையமைப்பாளர் அனிருத் தற்போது பல பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் அடுத்ததாக ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி ஹிந்தி, தமிழ். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிந்தியிலும், தமிழும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த அளவிற்கு ஹிட் ஆகா கூடிய வகையில், படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் கொடுத்திருந்தார். இந்நிலையில், ஜவான் படம் வெளியாக இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் ஷாருக்கான், அட்லீ, அனிருத், விஜய்சேதுபதி என அனைவரும் கலந்துகொண்டார்கள். அப்போது விழாவிற்கு மாஸ் எண்டரி கொடுத்த ஷாருக்கான் அனிருத்தை கட்டியணைத்து பாசத்துடன் கன்னத்தில் முத்தமிட்டார்.
இதைப்போல, ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் போது நடிகர் ரஜினிகாந்த் அனிருத்துக்கு முத்தம் கொடுத்து படத்தில் சூப்பரான பின்னணி இசையை கொடுத்து அதிர வைத்திருந்ததை வெளிப்படுத்தினார். அதைப்போலவே வார்த்தையால் சொல்ல முடியாத அளவிற்கு தரமான பின்னணி இசையை அனிருத் ஜெயிலர் படத்தில் கொடுத்திருந்தார்.
இதனையடுத்து, அதே போலவே தற்போது நடிகர் ஷாருக்கானும் அனிருத்துக்கு முத்தம் கொடுத்தால் அந்த அளவிற்கு ஜவான் படத்தில் பின்னணி இசை மூலம் படத்தை எங்கையோ தூக்கி சென்றுவிட்டார் என தெரிகிறது. அதனால் தான் ஷாருக்கான் முத்தம் கொடுத்து தனது நன்றியை வெளிப்படுத்தி இருக்கிறார் என தெரிகிறது. படம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும், அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஜவான் திரைப்படத்தில் ஷாரூக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு, சுனில் குரோவர், சிமர்ஜீத் சிங் நாக்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.