‘புஷ்பா-புஷ்பா ராஜ்’ அல்லு அர்ஜூனின் லேட்டஸ்ட் லுக் இணையத்தில் வைரல்!
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை திரைப்படம் தான் புஷ்பா. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில், புஷ்பா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போதிலிருந்து ட்ரெண்டிங்கில் இருந்து வரும், அல்லு அர்ஜுன் தற்போது வரவிருக்கும் பிளாக்பஸ்டர், ‘புஷ்பா 2: தி ரூல்’ படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார் போல் தெரிகிறது.
அட ஆமாங்க… அல்லு அர்ஜுனின் இரண்டாவது லுக் போஸ்டரையும் தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர். நடிகர் அல்லு அர்ஜுன் ‘புஷ்பா ராஜ்’ கதாபாத்திரத்தில் முரட்டுத்தனமாக இருப்பது போல் தெரிகிறது. ஸ்டலிஷ் உடை மற்றும் கரடுமுரடான தாடியுடன், அவர் லாரி முன் நின்று கொண்டிருக்கும் படி காட்சியளிக்கிறார். மேலும், படபிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Pushpa2TheRule SHOOTING BTS????#AlluArjun ATTITUDE ????????
MOST HYPED FILM!!pic.twitter.com/xfKdn5UlRw
— Saloon Kada Shanmugam (@saloon_kada) August 30, 2023
புஷ்பா 2 படப்பிடிப்பிற்காக ராமோஜி பிலிம் சிட்டியில் பெரிய செட் அமைக்கப்ட்டுள்ளது. அங்கு தற்பொழுது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. புஷ்பா 2 அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் புஷ்பா ராஜ் மீண்டும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் காதல் செய்கிறாரா, பகத் பாசில் உடன் ஆக்சன் கட்சிகளில் மிரட்டுகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.