சீனா வெளியிட்ட புதிய நில வரைபடம்… இந்திய பகுதிகள் ஆக்கிரமிப்பு.?

India China border issue

2023ஆம் ஆண்டுக்கான புதிய நிலவரைபடத்தை சீனாவின் இயற்கை வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு பகுதியில் சீன எல்லைகள் குறிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மேற்கு பகுதி ( இந்தியாவின் கிழக்கு பகுதி ) அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.

ஏற்கனவே, இந்தியா – சீனா இடையே நில எல்லை பிரச்சனை என்பது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. மேலும், அருணாச்சல பிரதேசத்தில் இருந்து சீனா செல்லும் இந்தியர்களுக்கு தனி விசா கொடுத்த விவகாரங்களும் அங்கே நடந்துள்ளன என்பது குறிப்பிட தக்கது.

இத்தகை சமயத்தில் சீனா வெளியிட்டு புதிய நில வரைபடம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் மாநிலத்தில் உள்ள அக்சாய் சின் பகுதிகளை சீன எல்லைக்குள் உள்ளடைக்கியுள்ளது. அதே போல சீனாவில் இருந்து பிரிந்து தனி நாடாக உள்ள தைவான் உள்ளிட்டவையையும் சீனா புதிய வரைபடத்தில் இணைத்துள்ளது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. சீன அரசின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்